ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு: தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு : தமிழக அரசு அறிவிப்பு

ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு:
தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு :
தமிழக அரசு அறிவிப்பு

55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும் ‘ டெட் ‘ தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில், 1.75 லட்சம் பேருக்கு மேலானவர்கள், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.

சிறப்பு டெட் தேர்வு வேண்டாம்; சீராய்வு மனு தாக்கல் செய்யுங்கள் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

இந்நிலையில், 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும், ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவதை, உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கி உள்ளது. இதற்கு தமிழகத்தில் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

டி.ஆர்.பி., மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள், மீண்டும் எதற்காக ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும்; தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி இருந்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் 55 வயதிற்கு மேலானவர்கள் பதவி உயர்வு பெற டெட் தேர்வு தேர்ச்சி அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.