தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கலை, கல்வி, மற்றும் பண்பாட்டுத்திறன் போட்டிகள் 2026 – “GJ ART FEST – 2K26′ : கீழ முடிமண் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன்!

தூத்துக்குடி கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கலை, கல்வி, மற்றும் பண்பாட்டுத்திறன் போட்டிகள் 2026 – “GJ ART FEST – 2K26′ :
கீழ முடிமண் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன்!

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச் சாலையில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில், மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி, கலை மற்றும் பண்பாட்டுத் திறன்களை வெளிக்கொணரும் நோக்கில் GJ ART FEST-2K26 என்ற கலைத் திருவிழா 16.10.2026 வெள்ளிக்கிழமை இன்று காலை 10.00 மணியளவில் பள்ளி மாணவர்களின் அறிவுத்திறன், கற்பனைத்திறன். படைப்பாற்றல் மற்றும் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டி, பென்சில் ஒவியப்போட்டி, அறிவியல் மற்றும் புத்தாக்கக்கண்காட்சி, ரங்கோலி, தனிப்பாடல் போட்டி, நாட்டுப்புற குழு நடனப் போட்டி, ஃப்யூஷன் தனிநடனப்போட்டி, ஒரு தலைப்பின் சாதக பாதகங்களை பற்றி பேசும் போட்டி  உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன.

இப்போட்டியில்
1. அரசு மேல் நிலைப் பள்ளி, வேப்பலோடை
2. பாரதியார் வித்யாலயா மேல் நிலைப் பள்ளி, தூத்துக்குடி,
3. புனித லுயிஸ் மேல்நிலைப் பள்ளி, கீழவைப்பார்
4. எஸ். எம்.டி தங்கம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி -தூத்துக்குடி
5. அரசு மேல்நிலைப் பள்ளி, குறுக்குச்சாலை
6. வ உ. சி. மேல்நிலைப் பள்ளி, ஓட்டப்பிடாரம்
7. ஹார்பர் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
8. காரப்பேட்டை நாடார் மேல் நிலைப் பள்ளி, தூத்துக்குடி
9. தஸ்நேவிஸ் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.
10.ஸ்பிரிங் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, சந்திரகிரி
11. பிரசன்னா மேல்நிலைப் பள்ளி, புதியம்புத்தூர்
12. புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கீமுமுடிமண்
13. விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
14. எஸ். ஏ. வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
15. சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
16. சி. எம்.மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
17. அரசு மேல்நிலைப் பள்ளி, தங்கம்மாள்புரம்
18. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி
ஆகிய பள்ளிகள் கலந்து கொண்டன.

மேற்கூறிய பதினெட்டு பள்ளிகளைச் சேர்ந்த 294 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுத் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகவும் பரிசளிப்பு விழாவின் சிறப்பு அழைப்பாளராகவும், தமிழ்நாடு அரசின் முன்னாள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாணவர்கள் கல்வியுடன் கலை மற்றும் பண்பாட்டுத் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித் திறன்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து பயிற்சி செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்” என்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் இளங்குமரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப் தலைமையுரை வழங்கினார். அறக்கட்டளை உறுப்பினர் கேப்டன் சுதன்கீலர் மற்றும் சுதாசுதன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, அவர்களுக்குச் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் பங்கேற்ற 18 பள்ளிகளில் சாதனைகளின் அடிப்படையில் சிறப்பிடம் பெற்ற கோப்பையை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி கீழமுடிமண் மாணவ மாணவிகள் ஒட்டு மொத்த சாதனையாளருக்கான வெற்றிக் கோப்பை (Overall Trophy) வழங்கப்பட்டது. மாணவர்களின் தனித்திறனை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவித்து போட்டிகளில் பங்கேற்கச் செய்த ஒவ்வொரு பள்ளி சார்ந்த ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தேசிய கீதம் பாட, விழா நிறைவுற்றது.

முனைவர் அகஸ்டின் அற்புத லிஸி, உதவிப் பேராசிரியர், வணிகவியல் துறை நன்றியுரை வழங்கினார். கிருஷ்;ணபிரியா, உதவிப் பேராசிரியர், ஆங்கிலத் துறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முதல்வரின் ஆலோசனையின் படி, கலாச்சார மன்றத்தினர் துணை ஒருங்கிணைப்பாளர் ரேவநந்தினி, உதவிப் பேராசிரியர், ஆங்கிலத் துறை மற்றும் கலாச்சார மன்றத்தின் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.