கோவில்பட்டி கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினம் – 2026
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணிஎண்: 132 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் (Eco Care Cell) இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
“இயற்கையை மீட்டெடுப்போம் – நமது எதிர்காலத்தை பாதுகாப்போம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சிநடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர். மதிவண்ணன் தலைமையில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம், மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், நீர் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தினர் வழிகாட்டுதலின்படி முதல்வர், பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.












