கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பிரிவில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளில் உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் பெறப்பட்டன.
அதைத் தொடர்ந்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு மற்றும் பொதுப் பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












