ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்
6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை :
கல்வி அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்!
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை இன்று வழங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.

பள்ளிகள் திறப்பில் மாற்றமா? என்ற கேள்விக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் ( IMD) வானிலை மாற்றம் பருவக் காற்று ஆரம்பமாகுமா ?அல்லது கோடை வெயில் தொடருமா என்ற கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.ஐஎம்டி இடம் இருந்து பதில் வந்த உடன் முதல் அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், பள்ளியில் மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுத் திட்டம் தொடரும் என்றும் பள்ளி ஆசிரியர்களின் நியமனத்தில் எந்த வித குளறுபடிகளும் இருக்காது என்றும் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
நிகழ்ச்சியின் பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தர மோகன் இ.ஆ.ப., பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர்.கண்ணப்பன்,தொடக்க கல்வி இயக்குநர் முனைவர்.நரேஷ், இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி) இராமசாமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர் சந்திப்பு
👇👇👇👇👇👇👇












