தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா!

தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா!

தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ( ஜீலை 15 ) காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர் பாராளுமன்ற பதவியேற்பு விழா நடைபெற்றது.

விழா இறைவணக்கத்துடன் தொடங்கியது. பள்ளி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல் பாடினர். அதனைத் தொடர்ந்து அனிதா ஆசிரியர் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

பள்ளித் தலைமை ஆசிரியை மெர்லின் பாக்கியவதி தலைமையுரை வழங்கி, பெருந்தலைவர் காமராஜரின் கல்விச் சேவைகளையும் மாணவர் பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். பின்னர் ஆசிரியை சந்திரா சிறப்புரையாற்றி மாணவர்கள் தலைமைத்துவ பண்பு, பொறுப்புணர்வு மற்றும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

காமராஜரின் கல்விப்பணியை எடுத்துரைக்கும் விதமாக மாணவிகளின் நடனமும், நாடகமும் அரங்கேறின.

பின்னர் பள்ளி மாணவர் பாராளுமன்ற பதவியேற்பு நிகழ்வை பள்ளித்தாளாளர் கேப்டன்.சுதன் கீலர் அவர்களும், அவரது துணைவியார் ,சுதா கீலர் ஆகியோர் இணைந்து நடத்தி வைத்தனர். மாணவர் தலைவர் மற்றும் அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்று தங்களது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் கேப்டன. சுதன் கீலர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், கவிதை, நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகள் விழாவை மேலும் சிறப்புத்தன.

விழாவின் நிறைவாக ஆசிரியை அஜிதா நன்றியுரை வழங்கினார். அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இவ்விழாவில் பள்ளித்தாளாளர், அவரது துணைவியார், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பெருந்தலைவர் காமராஜரின்
கல்விக்கொள்கைகளையும், ஜனநாயகப் பொறுப்புணர்வையும் மாணவிகளிடம் விதைக்கும் வகையில் நடைபெற்ற இவ்விழா அனைவரின் பாராட்டையும் பெற்றது.