தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பயிற்சி மற்றும் பணியமர்த்தல் பிரிவு, சியல் ஸ்கில்ஸ் அண்ட் கரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து, 10 ஏப்ரல் 2026 நேற்று வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

விக்ரம் சோலார் லிமிடெட்,
வயலின் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ,
லிங்கன் எலக்ட்ரிக் கம்பெனி (இந்தியா) பிரைவேட் லிமிடெட்,
ZF கமெர்ஷியல் வாகன கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்தியா லிமிடெட்,
NCR கார்ப்பரேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட்,வாலியோ இந்தியா பிரைவேட் லிமிடெட் (வாலியோ குழுமம்),
PB ஃபின்டெக் பிரைவேட் லிமிடெட் ,
சிட்டி யூனியன் வங்கி லிமிடெட்,
HDB ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட்
எஃபிகசி எஎம்எஸ் பிரைவேட் லிமிடெட் ,
சியல் ஹைச்ஆர் சர்வீசஸ் லிமிடெட்,
ரியால்டோ என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்,மரிஸ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் , என மொத்தம் 13 நிறுவனங்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கின. வ.உ.சி கல்லூரியில் இருந்து 161 மாணவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பணியமர்த்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.












