2025 – 26 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களின் அதிக தேர்ச்சிக்கு முயற்சிக்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல்

2025 – 26 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களின் அதிக தேர்ச்சிக்கு முயற்சிக்க வேண்டும்:
ஆசிரியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல்

முந்தைய கல்வி ஆண்டை விட 2025 – 26 ம் கல்வி ஆண்டில் மாணவர்கள் அதிக தேர்ச்சியை பெரும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுக்கு அறிவு றுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 2 ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதனை அடுத்து பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார்.இந்த கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை சார்ந்த இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பள்ளி திறப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி பள்ளிகளில் படித்து வந்த மாணவர்களில் இடை நிற்றவர்களை கண்காணித்து இடைநிற்றல் இருந்தால் அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். மீண்டும் முந்தைய கல்வி ஆண்டை விட இந்த கல்வி ஆண்டில் அதிகப்படியான தேர்ச்சி பெற ஆசிரியர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்னர் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், பள்ளிக் கட்டிடங்களின் உறுதி தன்மையை பரிசோதிக்க வேண்டும் மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகள் நடத்த வேண்டும், மாணவர்களின் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டும்,உடற்கல்வி பாட வேலையை முறையாக பின்பற்றி சாதனை மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.