தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ( தூத்துக்குடி மாவட்டம் );மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் சர்வதேச தாய்மொழி தினம் மற்றும் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் நூற்றாண்டு விழா.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ( தூத்துக்குடி மாவட்டம் );மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் சர்வதேச தாய்மொழி தினம் மற்றும் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் நூற்றாண்டு விழா.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் இணைந்து தூத்துக்குடி அழகப்பா பல்கலைக் கழக மையம் அலுவலக மாடியில் 21.02.2026 சனிக்கிழமை சர்வதேச தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது.

இந்தியப் பொதுவுடமை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடும் விதமாக “வெல்லும் பொதுவுடமை” கவியரங்கம் நடைபெற்றது.

தோழர். கரிசல் அன்பழகன் தலைமை வகித்து தலைமையுரையாற்றினார்.
தமிழாசிரியர் வள்ளிநாயகி தாய்மொழி நாள் சிறப்புரையாற்றினார். “வெல்லும் பொதுவுடமை” தலைப்பில் நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ், எழுத்தாளர் லோகு உலகம்மாள், கவிஞர் .துளசிதாசன், ஆசிரியர் பிரபாவதி, கவிதை வாசித்தனர்.

வழக்கறிஞர். பாலசேகர், ஆசிரியர் சேவியர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தருவைக்குளம் செயலாளர் தோழர் லாரன்ஸ், இலக்கிய ஆர்வலர் பத்மநாதன் ஆகியோர் தாய்மொழி மற்றும் பொதுவுடமை குறித்து சிற்றுரையாற்றினார்கள்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தாளமுத்துநகர் கிளை செயலாளர் தோழர். ரவி மற்றும் சமூக ஆர்வலர் செல்வின் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தோழர். மாரிமுத்து நிகழ்ச்சியின் நோக்கவுரை தொகுப்புரை நன்றியுரையாற்றினார். இலக்கிய ஆர்வலர்கள் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.