காலமானார்: ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுடலை மணி ( எ ) சாம் ராஜாமணி

காலமானார்:
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுடலை மணி ( எ ) சாம் ராஜாமணி !

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி என்ற சாம் ராஜாமணி ( 79 ).

இவர் தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

தலைமை ஆசிரியர் சுடலை மணி கடந்த ஒருமாத காலமாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று 24 – 05 – 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு காலமானார்.அவருக்கு வயது 79.

காலமான தலைமை ஆசிரியர் சுடலைமணி முடிவைத்தானேந்தல் கிராமம் செல்லையா நாடார் மகன் ஆவார்.

தலைமை ஆசிரியர் சுடலை மணி ( எ ) சாம் ராஜாமணி – யின் நல்லடக்க ஆராதனை நாளை 25 – 05 – 2026 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தூத்துக்குடி சிதம்பர நகர் CSI அபிஷேக நாதர் ஆலயத்தில் நடைபெறும் அதன் பின்னர், தூத்துக்குடி CSI முனிசிபல் கல்லறை தோட்டத்தில் உடல் நல்லடக்கம் நடைபெற உள்ளது.

ஆசிரியர் குடும்பம்:

காலஞ்சென்ற தலைமை ஆசிரியர் சுடலை மணிக்கு தங்கம் சாந்தகுமாரி என்ற மனைவியும்,3 மகள்கள் மற்றும் 1 மகன் என 4 பிள்ளைகள் உள்ளனர்.இவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.மேலும் 2 மகள்கள் அரசுப் பள்ளியிலும், மேலும் 1 மகள் மற்றும் மகன் அரசு உதவி பெறும் பள்ளியிலும் பணியாற்றி வருகின்றனர்.

தொடர்புக்கு:

No: 2, SM புரம், 1வது தெரு, தூத்துக்குடி.
தொடர்புக்கு – 9500276787