தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான “QMAT”2026 வினாடி – வினா போட்டி :
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி சாம்பியன் !

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சிக் கணிதவியல் துறையின் சார்பில், 15.10.2026 நேற்று மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான ‘QMAT-26’ வினாடி வினாப் போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில் 18 பள்ளிகளைச் சேர்ந்த 36 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகள் விபரம் பின்வருமாறு:

முதல் பரிசு:
கமலாவதி மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம்.
இரண்டாம் பரிசு:
பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
மூன்றாம் பரிசு:
டி.எம்.என்.எஸ். – டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. தூத்துக்குடி.

வெற்றி பெற்ற மாணவர்களுக்குக் கனரா வங்கியின் சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இப்போட்டிக்கான சுழற்கோப்பையை கனரா வங்கி வழங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் முனைவர் வீரபாகு தலைமை தாங்கினார். கணிதவியல் துறையின் இணைப் பேராசிரியரும் துறைத் தலைவருமான முனைவர் மீனாட்சி சுந்தரம் நிறைவுரையாற்றினார்.

தூத்துக்குடி ஸ்ரீ காமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மீனகுமாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.













