தூத்துக்குடி கிருபா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

தூத்துக்குடி கிருபா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம்

தூத்துக்குடி கால்டுவெல் காலனி கிருபா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு தாளாளர் கிரேஸ் ஜேஸ்மின் மற்றும் பள்ளி ஆசிரியைகள் ஜெபா, ஹரிஸ்மா, வசந்த பிரியா, ரோகிணி, பாக்கியலட்சுமி தலைமையில் மரக்கன்றுகள் நட்டு விழா சிறப்பிக்கப்பட்டது.

5 ம் வகுப்பு மாணவ மாணவிகள் முத்துகுமார், சுகன், குணநிவேதா, ரோஸ்னி, மதுமிதா மற்றும் தனன்யா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் நெகிழி பாட்டில், நெகிழி பைகளைத் தவிர்த்து துணிப்பைகளையும், எவர்சில்வர் பாட்டில்களையும் கொண்டு வருவோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.