தூத்துக்குடி நகர்ப்புற ஒன்றியத்தில் தொடக்கநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாட புத்தகப் பயிற்சி நடைபெற்றது !
தூத்துக்குடி நகர்ப் புறம் ஒன்றியத்தில் வகுப்பு 1 முதல் 3 ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2026 -2027 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் பருவத்திற்குரிய புதிய பாடப் பொருள் சார்ந்த பயிற்சி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெபா மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் முருகன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, ஆசிரியர் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி புதிய பாடநூலை பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் பாடங்களுடன் இணைந்துள்ள மாணவர்களுக்கான கற்றல் செயல்பாடுகளை வழிநடத்துதல் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வானரமுட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் தனலட்சுமி பயிற்சியை தொடங்கி வைத்து கருத்துரை வழங்கினார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பால்சாமி, ஆசிரியர்கள் கிருஷ்ணமணி,கனிச்செல்வி,ஜெயமிரியாம்,அமல பென்ஸி இளமதி மற்றும் ரோஸ்மி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.


தூத்துக்குடி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முருகேசன் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூறினர்.

பயிற்சி ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு வனிதா, ஆசிரியர் பயிற்றுநர்கள் கணபதி மற்றும் இ ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.












