தூத்துக்குடி
வ. உ. சிதம்பரம் கல்லூரி வேதியியல் இளங்கலை முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு
2022–2025ஆம் ஆண்டுக்கான B.Sc. வேதியியல் முடித்துச் சென்ற மாணவர்களில் 8 பேர் பெங்களூரு, ஹோசூரில் உள்ள L&T பயிற்சி மையத்தில் 01.06.2025 முதல் 30.06.2025 வரை நடைபெறும் பயிற்சி திட்டத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களை கல்லுரி முதல்வர் முனைவர். வீரபாகு பாராட்டினார்.
மேலும் மாணவர்களுக்கு இந்த முக்கியமான வாய்ப்பைப் பெற்றுத்தந்ததற்கும், தொழில்முக நெறிப்படுத்தலில் வழிகாட்டியதற்கும், துறைத் தலைவர் முனைவர். மாதவன் மற்றும் பிற ஆசிரியர் பெருமக்களுக்கு பாராட்டுதலையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்தார் முதல்வர் முனைவர். வீரபாகு.












