வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி
+ 2 பொதுத் தேர்வில் தொடர்ந்து ஏழு வருடங்களாக 100% தேர்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா வேப்பலோடையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த பள்ளியில் 2024 – 2025 கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை 55 மாணவர்கள் எழுதினர்.இதில் 29 பேர் மாணவர்கள் 26 பேர் மாணவிகள். இதில் தேர்வு எழுதிய 55 மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர்.
இந்தப் பள்ளியில் படித்த மாணவி 545 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார்.
இந்த தேர்ச்சிக்கு முக்கிய காரணம் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட சேகர் ஆவார்.
இந்த பள்ளியில்தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற காலத்திலிருந்து தொடர்ச்சியாக 7 வருடங்களாக 12ஆம் வகுப்பு
பொதுத்தேர்வில் 100%தேர்ச்சியை வழங்கி உள்ளார்.
இந்த தேர்ச்சிக்கு காரணம் தலைமையாசிரியர் சேகரின் முயற்சியே ஆகும்.
தொடர்ந்து 7 ஆண்டுகளாக பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற வேப்பலோடை மேல்நிலைப் பள்ளி மாணவர்களையும் அதற்கு காரணமாக இருந்த தலைமை ஆசிரியர் சேகர் மற்றும் ஆசிரியர்களையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி பாராட்டினார்












