கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணிதிட்ட அணிஎண்:132 மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் இணைந்து உலக புகையிலை எதிர்ப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று 30.05.2026 நடத்தியது.
“ஆரோக்கியமான இளைஞர்களால் புகையிலையற்ற இந்தியா” என்ற இலக்கை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முன்னிலையில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தினர் வழிகாட்டுதலின்படி முதல்வர், பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.












