தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் புனித வளன் துவக்கப் பள்ளி ஆசிரியை வனிதாவுக்கு டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் புனித வளன் துவக்கப் பள்ளி ஆசிரியை வனிதாவுக்கு
டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் புனித வளன் துவக்கப்பள்ளி ஆசிரியை வனிதா. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றுள்ளார்.

இந்த விருதை ஆசிரியர் தினமான நேற்று சென்னை அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வழங்கினார்.

ஆசிரியை வனிதாவை பள்ளி தாளார் அருட்தந்தை ஜாக்சன், தலைமை ஆசிரியை சகாய செல்வி, மற்றும் சக ஆசிரியர்கள், கருங்குளம் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

இவரது கணவர் கனகராஜ் சாத்தூர் கோட்டாச்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் வனிதா ஆரம்ப காலத்தில் முத்தாலங்குறிச்சி புனித வளன் பள்ளியில் பணியாற்றினார். தொடர்ந்து கருங்குளத்தில் பணியாற்றும் போது மாணவ மாணவிகள் முன்னேற்றத்துக்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.