2025 – ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது :
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் தேர்வு
2025-ம் ஆண்டிற்கான தேசிய நல் – ஆசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மொத்தமாக 45 ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி மற்றும் திருப்பூர் அரசுப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் தேசிய ஆசிரியர் விருதுக்காக தேர்வாகி இருப்பதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புதுச்சேரியை சேர்ந்த ரெக்ஸ் (எ) ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவருக்கும் டெல்லி விஞ்ஞான் பவனில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார்.









