தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 4.7.2025 அன்று மாணவர் பேரவைத் துவக்க விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ, தலைமை தாங்கினார். கல்லூரி துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர். எழிலரசி, சுயநிதிப்பிரிவு இயக்குனர் அருட்சகோதரி முனைவர். ஆரோக்கிய ஜெனிசியஸ் அல்போன்ஸ், தேர்வுக்கட்டுப்பாட்டு ஆணையர் அருட்சகோதரி. ரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சவரியனா தலைமை குரு அருட்தந்தை சிங்கராயர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

மாணவர் பேரவை தலைவரும் விலங்கியல் துறைப்பேராசிரியருமான முனைவர். மேரி பாப்டிஸ்டா ஜெனட் வரவேற்புரை வழங்கினார்.

விழாவில் கீழ்கண்ட மாணவியரை பேரவை நிர்வாகிகளாக கல்லூரி முதல்வர் நியமனம் செய்தார்.

பேரவைத் தலைவி:
அன்டோனலா இஜினியா. (பொருளியல்துறை).

பேரவை செயலாளர்:
எழில் மகிபா. ( வணிகவியல் துறை) –

பேரவை துணைத் தலைவர்:
அமிர்த ஷர்மினி. (ஆங்கிலத்துறை).
சுயநிதிப்பிரிவு

பேரவைத் தலைவி:
விஷ்ருதி பிரியதர்ஷினி. (வணிகவியல் துறை) –

பேரவை செயலாளர்:
சிபோரா – (வணிக மேலாண்மை துறை) –

பேரவை துணைத் தலைவர்:
அசினா பானு. (நுண்ணுயிரியல்துறை).

இதனைத் தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த வகுப்புத் தலைவிகள், கல்லூரி சார்பில் நடத்தப்படும் கலை மன்றங்கள் மற்றும் சமூகம் சார்ந்த சங்கங்களின் தலைவிகள் கல்லூரிக்காக தொடர்ந்து சேவை செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.
தொடர் நிகழ்வாக மீண்டெழுதல் எனும் கருத்தாக்கத்தை மையமாகக்கொண்டு “நான் வீழ்வேன் என்று நினைத்தாயா?” எனும் பொருண்மையில் மாணவியர் நிலைக்காட்சி நடைபெற்றது.