தூத்துக்குடி வ.உ.சி. கல்விக் கழக சிறப்பு பள்ளியின் 21 வது ஆண்டு விழா
தூத்துக்குடி வ.உசி. கல்விக் கழக அறிவுசார் குறைபாடுடையோர் பள்ளியின் (தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்றது) 21வது ஆண்டு விழா 16 – 04 – 2026 அன்று வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வ.உ.சி. கல்விக் கழக உறுப்பினரும் தூத்துக்குடி கனநீர் ஆலையின் முன்னாள் விஞ்ஞானியுமான வேணுகோபால், முனைவர்.மீனாட்சி, பேராசிரியர் (ஒய்வு) ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் விழாவில் காந்தி, வ.உ.சி. கல்விக் கழக உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக வ.உ.சி. கல்விக் கழக சிறப்பு பள்ளியின் ஆசிரியர் வைரமாரி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு பள்ளி ஆசிரியர் இந்திரா மெர்லின்,பள்ளி ஆண்டு அறிக்கையை சமர்பித்தார்.

சிறப்பு விருந்தினர் தன்னுடைய உரையில் சிறப்பு குழந்தைகளை பாரமரிப்பதில் வ.உசி. கல்விக் கழகம் மிகவும் சிறப்புடன் தொண்டடாற்றி வருகிறது என்றும், ஆசிரியர்களும் இப்பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
பின்னர் சிறப்பு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இயன்முறை மருத்துவர் செல்வி நந்தினி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்களை வாசிக்க, அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கினர்.

சிறப்பு பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி அனைவருக்கும் நன்றி கூறினார். இறுதியாக தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது.
விழா ஏற்பாடுகளை சிறப்பு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வரலாற்றுத் துறை பேராசிரியர் முனைவர். ராஜதுரை ஆகியோர் செய்திருந்தனர்.













