தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது :

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது :

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் (Entrepreneurship Development Cell) சார்பில், மாணவர்களிடையே தொழில்முனைவு திறன்களை வளர்க்கும் நோக்கில் “Mind to Market – Design Thinking Workshop” என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை 28.07.2026 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) முதன்மைப் பயிற்சியாளரும், தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான முனைவர் காயத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, Design Thinking அணுகுமுறையின் முக்கியத்துவத்தை விளக்கினார். மேலும், புதிய யோசனைகளை உருவாக்குதல் (Ideation), முன்மாதிரிகளை (Prototypes) உருவாக்குதல் மற்றும் Unique Value Proposition-ஐ அடையாளம் காணுதல் ஆகியவற்றின் மூலம் தொழில்முனைவு எண்ணங்களை வெற்றிகரமான வணிக முயற்சிகளாக மாற்றுவது குறித்து மாணவர்களுடன் பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு, விலங்கியல் துறைத் தலைவரும் அகத்தர மதிப்பீட்டு குழு (IQAC) ஒருங்கிணைப்பாளருமான முனைவர்.ராதிகா ஆகியோர் இணைந்து சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியை, தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஷைலா மற்றும் அனைத்து துறைகளின் ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.