தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி திறப்பு :
அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி வியாழக்கிழமை திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக ஜூன் 1ம் தேதி பள்ளிகளை திறக்க கூடாது என பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நேற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 6 தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று பதில் அளித்த அமைச்சர், இன்று அதன்படி பள்ளிகளின் திறப்பு 4 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தெரிவித்தார்.
இங்கே பதிவிறக்கம் செய்யவும்
👇👇👇👇👇👇👇
Revised-DIPR-PR No.096-Hon’ble School Education Minister Press Release-Date 26.05.2026












