கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வணிகவியல் துறை நிறுவனச் செயலாளர் படிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் (தொழிற்சார் கணக்கு வைப்பு முறை) துறை சார்பில் நிறுவனச் செயலாளர் படிப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம் (ICSI), மதுரை கிளை தலைவர் ராமலிங்கம், பொருளாளர் பரமசிவம், பொறுப்பாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு. நிறுவனச் செயலாளர் கல்வியின் முக்கியத்துவம், வேலைவாய்ப்புகள், மற்றும் படிப்பின் அமைப்பு குறித்து விரிவாக விளக்கினர். மாணவர்களின் சந்தேகங்களுக்கு நேரடியாக பதிலளித்து, தேவையான விளக்கங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சி, கல்லூரி தாளாளர் வழிகாட்டுதலின் படி, முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
வணிகவியல் துறை மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.












