கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட புத்தாக்க அறிமுக கருத்தரங்கம்

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட புத்தாக்க அறிமுக கருத்தரங்கம்

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் சார்பாக புத்தாக்க அறிமுக கருத்தரங்கம் மற்றும் பரிசளிப்பு விழா 26. 3. 2026 வியாழன் அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் கணினி அறிவியல் துறை பேராசிரியை முனைவர்.மீனாட்சி அறிமுக உரையாற்றினார். விழாவிற்கு முதல்வர் ( பொறுப்பு ) முனைவர்.ராம் சங்கர் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெளியப்பன் கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவ , மாணவிகளுக்கு தேசிய சேவை திட்ட புத்தாக்க அறிமுக கருத்தரங்க உரையாற்றினார்.

மேலும் மாணவ, மாணவிகளை நாட்டு நலப்பணித் திட்ட சேவையாற்றுவதின் மூலமாக தங்கள் ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ளும் முறைகளை எடுத்துரைத்தார். முன்னதாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பால் மகேஷ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டு தலைப்பில் நடைபெற்ற மாநில கருத்தரங்கில் பங்கு பெற்ற தமிழ்த்துறை மாணவி ராமலட்சுமி, கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கான சமூக நீதி மாநில கருத்தரங்கில் பங்கு பெற்ற வணிக நிர்வாகவியல் துறை மாணவர் கண்ணன், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட கணிதவியல் துறை மாணவன் ஸ்ரீ திருமலை, தேசிய குடியரசு தின விழா அணிவகுப்பு முகாமில் பங்குபெற்ற வணிகவியல் துறை மாணவி அன்னலட்சுமி மற்றும் தமிழ்த்துறை மாணவி மாலதி, கர்நாடக மாநிலம் ரைச்சூரில் தேசிய ஒருமைப்பாட்டு முகாமில் பங்கு பெற்ற வணிக நிர்வாகவியல் துறை மாணவர் தினேஷ் ராமு, சென்னை விஐடி வளாகத்தில் நடைபெற்ற மாநில இளைஞர் திருவிழாவில் பங்குபெற்ற தமிழ்த்துறை மாணவன் பட்டுராஜ், பல்கலைக்கழக அளவில் மாநில இளைஞர் திருவிழா அணித்தலைவராக சென்ற நாட்டு நலப்பணித்து அலுவலர் முனைவர் பால் மகேஷ் ஆகியோருக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

நிகழ்வில் இறுதியாக கணிதவியல் துறை பேராசிரியர் ஆறுமுகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இக்கருத்தரங்கநிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.