தூத்துக்குடி “தி விசாகா பள்ளி” மாணவர்கள் வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு கல்வி சார்பாக வருகை !
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் தி விகாசா பள்ளியைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள், 8 ஆசிரியர்களுடன், கல்விசார் அனுபவப் பயணத்தின் ஒரு பகுதியாக வ.உ. சிதம்பரம் கல்லூரி வளாகத்திற்கு இன்று (30.8.2026)வருகை தந்தனர்.

மாணவர்கள் விலங்கியல் அருங்காட்சியகத்தையும் நிலத்தியல் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர். அப்போது, விலங்கியல் மற்றும் நிலத்தியல் துறைகளின் பேராசிரியர்கள் அங்கிருந்த காட்சிப் பொருட்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவான மற்றும் பயனுள்ள விளக்கங்களை வழங்கினர்.

மேலும், விலங்கியல் மற்றும் நிலத்தியல் துறைகளின் முக்கியத்துவம், அவற்றின் பரந்த வாய்ப்புகள், உயிரினப் பன்முகத்தன்மை, புவியியல் பாரம்பரியம் மற்றும் இத்துறைகளில் உள்ள பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்து, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தினர்.

இந்த வருகை, வகுப்பறைக் கற்றலை நடைமுறை அறிவுடன் இணைத்து, மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வையும் ஊக்கத்தையும் வழங்கிய சிறப்பான கல்வி அனுபவமாக அமைந்தது.
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து, சிறந்த ஏற்பாடுகளை மேற்கொண்ட விலங்கியல் மற்றும் நிலத்தியல் துறைகளின் தலைவர்கள் மற்றும் அனைத்து பேராசிரியர்களையும் பாராட்டினார் .













