TNEA 2025 பொறியியல் படிக்க ஆர்வம் அதிகம் : 2,98,425 பேர் விண்ணப்ப பதிவு : எந்த ஆண்டும் இல்லாத சாதனை

TNEA 2025 பொறியியல் படிக்க ஆர்வம் அதிகம் :
2,98,425 பேர் விண்ணப்ப பதிவு :
எந்த ஆண்டும் இல்லாத சாதனை

இன்ஜினியரிங் படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே மாதம் 7-ந்தேதி தொடங்கி நேற்று ஜீன் 6 ம் தேதியுடன் முடிவடைந்தது.

விண்ணப்பப்பதிவு தொடங்கியதில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வந்தார்கள். விண்ணப்பப்பதிவு செய்வதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

நேற்று மாலை நிலவரப்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்..

விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்பவர்கள்தான் அடுத்தகட்டமாக கலந்தாய்வுக்கு அழைக்கப்பட உள்ளார்கள்.

ஆனால் இந்த ஆண்டு நேற்று மாலை நிலவரப்படி, 2 லட்சத்து 98 ஆயிரத்து 425 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்திருந்தனர்.
அதில் 2.44 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.

TNEA 2025 மொத்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள்:

தமிழ்நாட்டில் அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் இடங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு மொத்த இடங்களை விட குறைவாகவே விண்ணப்பித்திருந்தார்கள். 1 லட்சம் முதல் 50 ஆயிரம் வரை இடங்கள் காலியாகவே இருந்தது,

ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை.. மொத்த எண்ணிகையைவிட 2 ஆயிரம் பேர் அதிகமாக, அதாவது 2 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இது மாணவர்களிடையே பொறியியல் படிப்புக்கு மவுசு அதிகமாக உள்ளது என்ற நம்பிக்கையை காட்டுகிறது.

TNEA 2025ல் 3 படிப்புக்கு விண்ணப்பங்கள் அதிகம் :

செயற்கை நுண்ணறிவு,

தரவு அறிவியல்,

கம்ப்யூட்டர் சயின்ஸ்

சார்ந்த படிப்புகளை முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளதால், அந்த படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு :

10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

கட்ஆஃப் :

வரும் 27-ந்தேதி தரவரிசைப்பட்டியல் (கட் ஆஃப்) வெளியிடப்பட இருக்கிறது.

மாணவர்களே அதிகம் :

பொறியியல் படிப்பிற்கு இந்த ஆண்டு 2,44,168 மாணவ, மாணவிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.

இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 805 மாணவர்கள், 1 லட்சத்து 10 ஆயிரத்து 363 மாணவிகள்.

சான்றிதழ் பதிவேற்றம் :

இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 102 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.

சான்றிதழ்களை 9-ந்தேதி வரை (நாளை மறுதினம்) பதிவேற்றம் செய்ய முடியும்.

கடந்த 5 ஆண்டுகள் கணக்கீடு :

கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரையில் கணக்கிட்டால், 2021ம் ஆண்டில் 1,45,043 பேரும், 2022ல் 1,69,083 பேரும், 2023ல் 1,87,847 பேரும், 2024ல் 2,09,653 பேரும் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி படிப்புகளில் சேருவதற்காக காத்திருந்தனர். ஆனால் 2025 ல் இந்த முறை 2.44 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர்.

குறிப்பு :

பொறியியல் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் மாறக்கூடும். குறிப்பாக, புதிய கல்லூரிகள் திறப்பதன் மூலமும், சில கல்லூரிகள் மூடப்படுவதன் மூலமும் இடங்களின் எண்ணிக்கை மாறும். எனவே, எத்தனை இடங்கள் உள்ளன என்பதை துல்லியமாக கூறுவது கடினம்.