கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக விலங்கு வழி நோய்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது!

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக விலங்கு வழி நோய்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது!

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் (YRC) மற்றும் நுண்ணுயிரியில் துறை இணைந்து, உலக விலங்கு வழி நோய்கள் தினத்தை (WORLD ZOONOSES DAY) முன்னிட்டு ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இரண்டாமாண்டு முதுகலை நுண்ணுயிரியல் துறை மாணவி கெத்தியால் நிஸ்ஸிராஜ் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் தலைமையில் விருதுநகர் மாவட்ட சிப்பிபாறையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஹர்ஷா கலந்து கொண்டு விலங்கு வழி நோய்களான ரேபீஸ் (Rabies), நிபா (Nipah), பறவைக் காய்ச்சல் (Avian Influenza), மற்றும் எபோலா (Ebola) ஆகியவற்றின் பரவல் பற்றிகருத்துரையாற்றினார்.

மேலும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள தொடர்பால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், நோய்த் தடுப்பு முறைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாமாண்டு முதுகலை நுண்ணுயிரியல் துறை மாணவி மேக்தலின் ஃபெபி நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், நுண்ணுயிரியல் துறைத்தலைவர் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் செய்திருந்தனர்.