தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் பேரழிவு நேரத்தில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக விளங்கும் மரங்களின் முக்கியத்துவம் “குறித்த கோஸ்டல் பயோ ஷீல்டு ” விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் பேரழிவு நேரத்தில் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பாக விளங்கும் மரங்களின் முக்கியத்துவம் “குறித்த கோஸ்டல் பயோ ஷீல்டு ” விழிப்புணர்வு நிகழ்ச்சி

வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பசுமை இயக்கம் சார்பாக “கோஸ்டல் பயோ ஷீல்டு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

திருச்செந்தூர் வன அலுவலர் ஆதிலிங்கம் மாணவர்களிடம் உரையாற்றினார். மனித இன வாழ்விற்கு தாவரங்கள் மற்றும் விலங்குகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும், இயற்கை பேரழிவு நேரத்தில் கடலோரப் பகுதிகளில் உயிர்க்காப்புக் கேடயமாக விளங்கும் மரங்களை நடுவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

விலங்கியல், தாவரவியல், இயற்பியல், கணிதம், நிலத்தியல், வரலாறு மற்றும் வணிகவியல் போன்ற துறைகளிலிருந்து சுமார் 74 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியால் பயன் பெற்றனர்.