கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி, உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது. கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன், துணை ஆய்வாளர் அர்ஜுன் ராஜ் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டனர்.

“போதைப் பொருட்கள் உடல் சீர்கேடையும், சமூக வீழ்ச்சியையும் ஏற்படுத்தும். உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க, இன்று தவிர்க்கும் முடிவு மிக முக்கியம்,” என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நவநீத கிருஷ்ணன் உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி மாணவர்களுக்கு வரவேற்புரைவழங்கி, விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

நிகழ்வை தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி நகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது. இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருளின் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாறும், முழக்கங்கள் எழுப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பேரணியை காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த கருத்தரங்கம் மற்றும் பேரணி கல்லூரித் தாளாளர் விஜயன் வழிகாட்டலிலும், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.