ஓட்டப்பிடாரம் மெக்காய் தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையம் தொடக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டார வள மையத்திற்கு உட்பட்ட டிஎம்பி மெக்கா வாய் தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2026 – 27 ஆம் ஆண்டிற்கான மையத்தின் தொடக்க விழா நேற்று (19.06.2026 ) நடைபெற்றது .
விழாவில் தொடக்கக் கல்வி அலுவலர் முத்தம்மாள் தலைமையில் சிறப்பு விருந்தினராக வட்டாட்சியர் அலுவலர் அய்யனார் கலந்து கலந்துகொண்டு திட்டத்தின் சிறப்பு கூறுகளை பற்றிக் கூறி, கற்போர்களுக்கு பயிற்சி கட்டகங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

விழாவின் ஏற்பாடுகளை வட்டார வள மேற்பார்வையாளர் பொறுப்பு எட்விஜ் மேரி ஆலோசனையின் பெயரில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் தன்னார்வலர் முத்துமாரி செய்திருந்தனர்.












