காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரி மாணவிகள் திறன்களை மேம்படுத்த கோவை கல்விப் பயணம்

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரி மாணவிகள் திறன்களை மேம்படுத்த கோவை கல்விப் பயணம்

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரி, தகவல் தொழில்நுட்ப துறை மாணவியர் கோயம்புத்தூரில் உள்ள Gateway Software Solutions நிறுவனத்திற்கு விஜயம் செய்தனர்.

இந்த பயணத்தின் போது, 52 மாணவியர் MERN Stack, MongoDB, Flutter போன்ற சிறந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடுகளை நேரில் பார்த்து ஆராய்ந்தனர்.

அவர்கள் இண்டர்ன்ஷிப் வாய்ப்புகளைப் பற்றிய விரிவான தகவல்களையும், தொழில்துறை நிபுணர்களிடம் இருந்து நேர்காணல்களையும் பெற்றனர்.

இது தொழில்நுட்ப உலகில் மாணவிகளின் திறமைகளை மேம்படுத்தும் வாய்ப்பாக அமைந்தது.

இந்த பயணத்தை கல்லூரி நிர்வாகமும், முதல்வரும் மிகுந்த ஆர்வமுடன் ஏற்பாடு செய்ததை, மாணவிகள் நன்றியுடன் வரவேற்றனர்.

இதன் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியை பின்பற்றும் ஒரு உற்சாகமும், உழைப்பும் மாணவிகளின் வளர்ச்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.