தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் நிகழ்ச்சி துவக்க விழா

தூத்துக்குடி வடக்கு பத்திரகாளி அம்மன் கோவில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் நிகழ்ச்சி துவக்க விழா

தூத்துக்குடி நகர்ப்புறம் வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு , மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மன்ற செயல்பாடுகள் நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.

நிகழ்ச்சியை பகுதியின் கவுன்சிலர் மரிய கீதா தலைமையேற்று துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியை தங்கமணி அனைவரையும் வரவேற்று பேசினார்.

பின்னர் இலக்கிய மன்றம், வினாடி வினா, சிறார் திரைப்படம், சுற்றுச்சூழல் மன்றம், கலை பண்பாட்டு மன்றம் வானவில் மன்றம் ஆகிய மன்றத்திற்கு பொறுப்பாசிரியர்களும், மாணவ தூதுவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் தாங்கள் சார்ந்த மன்றங்கள் பற்றி விரிவாகப் பேசினர்.

நிறைவாக பட்டதாரி ஆசிரியை ஜாய்சி நன்றியுரை ஆற்றினார்.