நீட் நிராகரிப்பு, கை கொடுத்தது பொறியியல் படிப்பு : ஆண்டிற்கு ரூபாய் 72.3 லட்சம் சம்பளம்

நீட் நிராகரிப்பு, கை கொடுத்தது பொறியியல் படிப்பு :
ஆண்டிற்கு ரூபாய் 72.3 லட்சம் சம்பளம்

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த சுரேஷ் – கீதா தம்பதியரின் மூத்த மகள் ரிதுபர்ணா வயது 20.

சிறுவயது முதலே டாக்டர் ஆக வேண்டும் என கனவு இருந்துள்ளது ஆனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் அவரது கனவு நனவாக இல்லை.

இதனால் அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனம் சோர்ந்து போகாத அவர் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். ஆரம்பத்தில் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். பின்பு ரிதுபர்னா தனது படிப்பில் ஆர்வம் காட்டி தீவிரமாக படித்துள்ளார்.

ரோபோடிக்ஸ் மூலம் பாக்கு விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பது அவரது முதல் திட்டமாக இருந்தது. ஒரு குழுவுடன் சேர்ந்து கோவா இஎன்இஎக்ஸ் போட்டியில் அறுவடை இயந்திரம் மற்றும் தெளிப்பான் மாதிரியை வழங்கி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

இதன் பின் உலகப் புகழ்பெற்ற பிரபல நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

அதற்கு நிறுவனம் எங்கள் நிறுவனத்தில் ஒரு பகுதியாக இருக்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று ரிதுபர்ணாவிடம் கேட்டபோது ஏதாவது ஒரு பணியை கொடுங்கள் அதை முடிப்பதில் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை அடுத்து அந்நிறுவனம் ஒரு சிறு பகுதி வேலையை அவருக்கு கொடுத்தனர். முதலில் அவருக்கு புரியவில்லை என்றாலும் ரிது பர்ணா தனது தீவிர முயற்சி மற்றும் ஆராய்ச்சி மூலம் அதனை முடித்துள்ளார்.

தொடர்ந்து எட்டு மாதங்கள் எண்ணற்ற சவால்கள் மற்றும் கடினமான நேர்காணல்களை எதிர்கொண்ட ரிதுபர்ணா பின் கடந்த ஜனவரி மாதம் முதல் ரோல் ராய்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்றார்.

அதன் பிறகு கல்லூரி வகுப்புகளில் கவனம் செலுத்தி வந்துள்ளார். இந்த தீவிர முயற்சியை தொடர்ந்து நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூபாய் 40 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. பின்பு ரிதுபர்ணாவின் திறமையை கண்டு அந்நிறுவனம் அவருக்கு ஆண்டுக்கு ரூபாய் 72.3 லட்சமாக சம்பளத்தை உயர்த்தி உள்ளது.

இறுதி செமஸ்டர் முடித்ததும் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தின் டெக்சாஸ் பிரிவில் பணியில் சேர உள்ளார். இளைஞர்கள் மனம் தளராமல் என்னை போல தங்கள் துறையில் சாதிக்க வேண்டும் என்று நம்பிக்கை வார்த்தைகளை இன்றைய இளைஞர்களுக்கு கூறியுள்ளார்.