தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பல் மருத்துவ முகாம்

தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பல் மருத்துவ முகாம்

தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பல் மருத்துவ முகாம் 12.9.2025 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.

நாட்டு நலப் பணித் திட்டமும் (அணி எண்கள் 47, 57) தூத்துக்குடி மாவட்ட, இந்திய பல்மருத்துவமனை சங்கமும் ரோட்டரி அமைப்பும் இணைந்து. இம் முகாமை நடத்தினர்.

கல்லூரி முதல்வர் இம்முகாமைக் கல்லூரிக் கலையரங்கில் தொடங்கி வைத்தார். டாக்டர். சண்முக பிரியா , P R R பல் மருத்துவமனை, டாக்டர். ரொவீனா ரூத் ஜேன் J. R. பல் மருத்துவமனை, டாக்டர். ஸ்டெஃபீனா ஐரின் ;> J. S. P பல் மருத்துவமனை டாக்டர். ஸ்வர்ண சௌமியா 4S Family பல் மருத்துவமனை, டாக்டர். மேகலா NEO பல் மருத்துவமனை, டாக்டர். தினேஸ் காமராஜ் PRR பல் மருத்துவமனை டாக்டர். பிரின்ஸ் சோயிஸ், டாக்டர். காந்திமதி. பிரின்ஸ் பல் மருத்துவமனை ஆகியோர் இணைந்து பல் பரிசோதனை செய்து பல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப் பரிசோதனை மூலம் பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவிகள் உட்பட744 பேர் பயன் அடைந்தனர். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர். ஸ்டெல்லா பாக்கியம் (அணிஎண்47) மற்றும் முனைவர்.புஷ்பகவல்லி (அணி எண் 57) ஆகியோர், இம் முகாமிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.