தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் சர்வதேச யோகா தினம்!

22 ஜூன் 2026 அன்று தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் 12வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை உடற்கல்வித் துறையும், நாட்டு நலப் பணித் திட்ட (NSS) அலகுகள் 68, 69 மற்றும் 70 ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு தலைமை தாங்கினார்.
நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.செல்வம் வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து உடற்கல்வி இயக்குநர் முனைவர்.சிவஞானம் யோகாவின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுந்தரி, யோகா ஆசிரியர் பல்வேறு யோகாசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை செயல்முறையாக விளக்கிக் காண்பித்தார்.

மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இப்பயிற்சிகளில் பங்கேற்றனர்.
நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆரோக்கிய செல்வ சுந்தரி சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். கிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களும், புவியியல் துறை மாணவர்களும் இணைந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.