தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் :
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கிராமப்புற மாணவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு உயர் கல்வி சேவையை பூர்த்தி செய்யும் விதமாக குறிப்பாக மாணவிகளுக்கு உயர்கல்வியில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கி தருவதற்காக உயர்கல்வித்துறை சார்பில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஓட்டப்பிடாரம், மானாமதுரை பண்ருட்டி, குன்னூர்,நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர், முத்துப்பேட்டை, திருவிடைமருதூர் மற்றும் கொளக்காநத்தம் ஆகிய புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்தார்.
இந்த 11 கல்லூரிகள் தலா 5 பாட பிரிவுகளுடன் தற்காலிக கட்டிடங்களில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் இந்த ஆண்டில் கூடுதலாக கிராமப்புறத்தில் பின்தங்கிய 3050 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள்.
இந்நிலையில் மேலும் 4 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கடந்த மே 3 ம் தேதி அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து நேற்று ஜூன் 20 ம் தேதி வெள்ளிக்கிழமை வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம்,திருச்சி மாவட்டம் துறையூர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் மேலும் புதிய 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த 4 புதிய கல்லூரிகளும் தர 5 பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்பட்டுள்ளன.இதற்கான செலவு தொகை ரூபாய் 8.67 கோடி ஆகும்
இதனால் இப்பகுதியில் உள்ள 1120 மாணவ, மாணவிகள் பயன் பெறுவார்கள்.












