தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வணிகவியல் மன்றம் துவக்க விழா நடைபெற்றது!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வணிகவியல் மன்றம் துவக்க விழா நடைபெற்றது!

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரி, முதுநிலை மற்றும் வணிகவியல் ஆய்வுத்துறை துறை, 2026–2027 கல்வியாண்டிற்கான TEMCOM Club (வணிகவியல் மன்றம்) துவக்க விழாவை 24.07.2026 அன்று காலை 11.30 மணியளவில் கல்லூரி கலையரங்கில் நடத்தியது.

இந்நிகழ்வில் தூத்துக்குடி இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (ICCI) செயலாளர் பொன்வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகவும், தூத்துக்குடியின் D.A.R. உப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் ஸ்ரீதரன் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினர்.

நிகழ்ச்சியின் போது, 2026–2027 கல்வியாண்டிற்கான வணிகவியல் மன்றத்தின் நிர்வாகிகள் பதவியேற்று, மன்றத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு வழிகாட்டுதலும் ஊக்கமும் வழங்கிய கல்லூரி முதல்வுக்கு துறையின் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர்.சொர்ண கணேஷ் மற்றும் உதவிப் பேராசிரியர் கந்தபிரியா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.