தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 97.42 சதவீதம் தேர்ச்சி
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 272 மாணவர்கள் எழுதியதில் 265 மாணவர்கள் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 97.42 ஆகும்.
முதல் மதிப்பெண் எம். பிரகதீஸ் ராஜ் 600க்கு 585 மதிப்பெண். வெற்றி பெற்ற மாணவர்களையும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களையும் பள்ளிச் செயலர் ரமேஷ் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜதுரை சாமுவேல் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி பாராட்டினர்.












