12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை:
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரி மேல் நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இத்தேர்வில் மாணவர் நவீன்குமார் 572 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ராஜா ஸ்ரீ 564 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவி மரியா ஜெனிபர் 543 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ரமேஷ் மற்றும் கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க உபதலைவர் செல்வராஜ் மற்றும் கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்க பொருளாளர் சுரேஷ் குமார் ஆகியோர் மாணவர்களை பாராட்டினார்கள் .

தர்மகர்த்தா மாரியப்பன், பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம் , பொருளாளார் பாஸ்கரன் மற்றும் பள்ளிக்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் பிரபு ஆகியோர் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் பரிசளித்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மாணவர்களின் இந்த மகத்தான வெற்றியை, ஆசிரியர்கள், அலுவலகர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும், மாணவர்கள் உயர்கல்வியிலும் சிறந்து விளங்கி பள்ளிக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று பள்ளி நிர்வாக குழுவினர் அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்..












