தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டி

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் குறுவட்டத்தில் அமைந்துள்ள கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான கலை இலக்கியப் போட்டிகள் 16.10.2025 வியாழக்கிழமை அன்று 10.30 மணியளவில் தொடங்கப்பட்டது. தமிழ்ப் பேச்சுப் போட்டி, ஆங்கில பேச்சுப் போட்டி, ரங்கோலி (கோலப்போட்டி), வினாடி வினா போட்டி, குழு நடனப்போட்டி, தீயில்லாத சமையல் போட்டி, மற்றும் கழிவுகளிலிருந்து கலைகளை உருவாக்குதல் போட்டி ஆகிய ஏழு போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் எட்டு மேனிலைப் பள்ளிகளைச் சார்ந்த 125 மாணவர்கள் பங்கேற்றனர்.
1.சி.எம்.மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

2. ஸ்ரீமதி. பொ. தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி.

3. வ.உ.சி.அரசு மேல் நிலைப்பள்ளி, ஓட்டப்பிடாரம்.

4. T.D.T.A. கே.ஜி.எம். மேல்நிலைப் பள்ளி, ச.கைலாசபுரம்.

5. புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி, கீழமுடிமன்.

6. புனித லூயிஸ் மேல்நிலைப் பள்ளி, கீழவைப்பார்.

7. அரசு மேல்நிலைப் பள்ளி, தருவைக்குளம்.

8. ஜாண், தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி, புதியம்புத்தூர்.

இதனை தொடர்ந்து பரிசளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கியது. கல்லூரிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப் தலைமையுரையாற்றினார்.

அவரது உரையில், கல்வி என்பது மாபெரும் அறிவு போன்றது, அந்த அறிவுக்கு உயிர் கொடுப்பது கலை, மாணவர்களுக்கு கலைசார்ந்த நிகழ்வுகளை ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் முதன்மை நோக்கமாக அமைகிறது என்று கூறினார்.

கல்லூரி முதல்வர் முனைவர். இளங்குமரன் சிறப்புரையாற்றினார். அவரது உரையில், தொடர் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட போதும், இந்த நிகழ்விற்கு வந்து இந்த கலை அரங்கத்தினை அலங்கரித்த மாணவர்களுக்கும், இங்கே பங்கேற்க அனுப்பி வைத்த அனைத்து தலைமையாசிரியர்களுக்கும், உடன் வந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், நன்றியை தெரிவித்துக் கொண்டார். உயர்கல்வியில் அடுத்து என்ன படிக்க போகிறோம் என்பதை தெளிவான முடிவு செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

மாணவர்களின் எதிர்காலத்திற்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரிச் செயலாளர், ஜீவன் ஜேக்கப் மற்றும் கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இணைந்து பரிசுகளை வழங்கினார்கள்.

சுதன், சுதாசுதன், மருத்துவர். மகிழ்ஜான் சந்தோக்ஷ், மருத்துவர். கீர்த்தனாமகிழ் ஆகிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அனைத்து போட்டிகளில் வெற்றிபெற்று சுழல் கோப்பையை, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்; பெற்று கொண்டனர்.

பள்ளி மாணவர்களோடு உடன் வந்திருந்த ஒவ்வொரு பள்ளி ஆசிரியருக்கும், ஷீல்டு ( Shield ) கொடுக்கப்பட்டது.
அனைத்து போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கு பங்கேற்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாசில்லா மதியரசி ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் வரவேற்புரை வழங்கினார். பிரின்ஸ் மத்தேயுஸ் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் நன்றியுரை வழங்கினார். கிருக்ஷ்ணபிரியா ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முதல்வரின் ஆலோசனையின்படி, அனைத்து துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.