ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான போட்டித் தேர்வு :
பாடவாரியான தேர்வு தேதிகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான போட்டித் தேர்வில் தமிழ் தகுதித்தாள், பொது அறிவு மற்றும் பாடங்கள் வாரியாக நடத்தப்படும் தேர்வுகளின் தேதிகள் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
பணிகள் :
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்முகத்தேர்வு உள்ள பதவிகள்) துணை இயக்குநர் (சட்டம்) புள்ளியியல் மற்றும் பகுப்பாய்வு உதவி இயக்குநர், மேலாளர் (சுரங்கம்) துணை மேலாளர் (சுற்றுச்சூழல்), வனத்துறை விஞ்ஞானி (கிரேடு-3) தலைமைச் செயலக நிருபர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்), உளவியலாளர், முதுநிலை பூச்சியியலாளர், சமூகவியாளர், கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 30 வகையான பதவிகளில் 330 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி கடந்த மே 7-ம் தேதி வெளியிட்டது.
விண்ணப்ப பதிவு :
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 13-ம் தேதி தொடங்கி ஜூன் 11-ம் தேதி முடிவடைந்தது. வெவ்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் ஜூலை 20 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பில் பொதுவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ் மொழி தகுதித்தாள், பொது அறிவுத்தாள் மற்றும் பல்வேறு பாடங்களுக்கான தேர்வுத் தேதி, தொடர்பான விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டிருக்கிறது.
தேர்வு தேதி :
அதன்படி, அனைத்து பதவிகளுக்கும் பொதுவான தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வு ஜூலை 20-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
தேர்வு நேரம் :
ஆங்கில சுருக்கெழுத்து தேர்வு ஜூலை 21-ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணி வரை கால்நடை மருத்துவம், படோ-டெக்னாலஜி, சட்டம், வணிக நிர்வாகம், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை அனைவருக்கும் நடைபெறும். அதே நாளில் தமிழ் சுருக்கெழுத்து தேர்வு பிற்கல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை உளவியல், புள்ளியியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்கள் தேர்வுகள் பிற்கல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைவரும் நடைபெறும்.
தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு, கெமிக்கல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடங்களுக்கான தேர்வு ஜூலை 22-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி அனைவரையும் சமூகவியல், நகர் ஊரமைப்பு திட்டமிடல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் பிற்கல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைவருக்கும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.












