கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் பயிற்சிப் பட்டறை
கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறை சார்பாக ஆர் ப்ரோக்ராம்மிங் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறை . நடைபெற்றது.
இதில் கோவில்பட்டி எஸ். எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து ஆர் ப்ரோக்ராம்மிங் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறையை கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள், ஆய்வகத்தில் நடத்தினர்.
பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்வை கே.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வழிகாட்டுதலின் படி கணினி அறிவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.













