தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார திருவிழா போட்டி: தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் 2 வது ரன்னர் அப்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார திருவிழா போட்டி:
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரிக்கு ஒட்டு மொத்த சாம்பியன் 2 வது ரன்னர் அப்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையின் சார்பில் உத்சவா 75, அத்தியாயம் -1 மாநில அளவில்  கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சாரத் திருவிழா என்ற போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.

 

17 கல்லூரிகளைசேர்ந்த 417 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.இதில் தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் இரண்டாவது ரன்னர் அப்பை வென்றது.

மூன்று போட்டிகளில் முதலாவது இடத்தையும் ஒரு போட்டியில் இரண்டாவது இடத்தையும் மூன்று போட்டிகளில் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகம், முதல்வர் முனைவர்.கனகராஜ் , அனைத்து பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.