இன்று மே 5,குலபதி ஏ.பி.சி.வீரபாகு பிறந்தநாள்


குலபதி என்று மக்களால் போற்றப்படும் ஐயா ஏ பி சி வீரபாகு 1915 ஆம் ஆண்டு மே 5 ம் நாள் தூத்துக்குடியில் பிறந்தார்.இந்திய தேசிய காங்கிரஸின் பேரியக்கவாதி
ஆன ஏ. பி. சி. வீரபாகு தூத்துக்குடியில் பள்ளிக் கல்வியினையும் திருநெல்வேலியில் கல்லூரிக் கல்வியினையும் முடித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரியினை 1951 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்குதற்கான நோக்கத்தில் உருவாக்கினார் குலபதி.
1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம் எல் ஏ வாக தனது மக்கள் பணியினை செய்தார்.
குலபதி ஏபிசி வீரபாகு அவர்களின் வழி தோன்றுதலாக கல்வித் தந்தை ஐயா ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் வ.உ.சிதம்பரம் கல்லூரியை சீரும் சிறப்புமாக வழி நடத்தி வருகிறார்.
கல்வித்தந்தை ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் வழிகாட்டுதலின்படி அவரது புதல்வர் கல்விச்செம்மல் டாக்டர் சொ.வீரபாகு வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வராக குலபதி ஏபிசி வீரபாகு அவர்களின் கனவுகளை நினைவாக்கிக் கொண்டு வருகிறார்.












