ஒட்டப்பிடாரம் தெற்கு ஆவாரங்காடு கிராமத்தில் அங்கன்வாடி மையம் :
சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி தெற்கு ஆவரங்காடு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 16.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா,
உதவி பொறியாளர் பத்மாவதி, பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன்,
ஊராட்சி செயலாளர் ராமலிங்கம்,
மற்றும் ஊர்ப் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.














