சென்னை சில்க்ஸ் நடத்திய போட்டிகளில் தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
தூத்துக்குடி நகர்ப் புறம் வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு , மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சென்னை சில்க்ஸ் நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்கள் பெற்றனர்.

குறிப்பாக முதல் வகுப்பு படிக்கும் சிறுமி நந்தனா மாறுவேட போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பெற்றார். அதற்கான சான்றிதழ், ரூபாய் 1500 க்கான பரிசுக் கூப்பன் மற்றும் ஷீல்டு ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
வெற்றி பெற்ற சிறுமி நந்தனா – வை பள்ளி மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.













