தூத்துக்குடியில் தொழில்முறை அழகுப் பணியாளர்களுக்கான செயல்முறை பயிற்சி
தொழில்முறை அழகுப் பணியாளர்களாக உருவாக விரும்புவோருக்கான செயல்முறை பயிற்சி நிகழ்ச்சி 02.02.2026 முதல் 06.02.2026 வரை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, தூத்துக்குடி,தருவைக்குளம், தூய மைக்கேல் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), தூத்துக்குடியின் சமூக மேம்பாட்டு நிகழ்ச்சி (CDP) – TOUCH, உன்னத் பாரத் அபியான் மற்றும் ஆங்கிலம் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறை இணைந்து ஏற்பாடு செய்தன.

இந்தப் பயிற்சி நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், அழகுத் துறையில் ஆர்வமுள்ள பெண்களுக்கு நடைமுறை அனுபவம் வழங்கி அவர்களின் தொழில்திறனை மேம்படுத்துவதாகும்.
இந்நிகழ்ச்சிக்கு அருட் சகோதரி முனைவர். குலந்தை தெரேசு, செயலாளர்; அருட் சகோதரி முனைவர்.ஜெஸ்ஸி பெர்னாண்டோ, முதல்வர்; மற்றும் அருட் சகோதரி முனைவர்.எழிலரசி, துணை முதல்வர் ஆகியோர் வாழ்த்துச் செய்தி வழங்கினர்.

இந்நிகழ்ச்சி முனைவர்.செரீனா மார்கரெட், ஆங்கிலத் துறைத் தலைவர் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. முனைவர்.ஹெர்மினா மற்றும் செல்வி மெல்பா ஷேரன் ஆகியோர் சமூக மேம்பாட்டு நிகழ்ச்சி பொறுப்பாசிரியர்கள் ஆக இருந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
மரியா ஜெயமேரி கன்யா, சர்வதேச மேக்கப் கலைஞர், பத்மா, அழகியல் நிபுணர் மற்றும் மேக்கப் கலைஞர், மற்றும் விஜயலட்சுமி, விஜயா பியூட்டி பார்லர் உரிமையாளர் ஆகியோர் வளநபர்களாக கலந்து கொண்டு மேக்கப், தோல் பராமரிப்பு மற்றும் தொழில்முறை அலங்காரத் திறன்களில் செயல்முறை பயிற்சி அளித்தனர்.














