கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நர்சரி மற்றும் பிரைமரி வகுப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
கோவில்பட்டி நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நர்சரி மற்றும் பிரைமரி வகுப்பு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
உறவின்முறை சங்க உப தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயபாலன், பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிச் செயலர் அட்வகேட் செல்வம், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி முதல்வர் பிரபு வரவேற்றார்.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு பாராட்டு நிகழ்வில் உறவின்முறை செயலாளர் ஜெயபாலன் பேசுகையில் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள் இந்த வயதில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு ஆசிரியர்கள் சரியான வழிகாட்டுதல், திறமைகளை வளர்க்க முழுமையான முயற்சி, மாணவச் செல்வங்களின் கல்வி முன்னேற்றம் உள்ளிட்டது பற்றி பெற்றோர்களுடன் தொடர்பில் இருந்து அவர்களின் வளர்ச்சி பற்றி தெரிவிக்க வேண்டும். சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வருவதற்கு ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறினார்.

தொடர்ச்சியாக ஆசிரியர்கள் ஐஸ்வரியம், அன்னலட்சுமி, அனிதா லட்சுமி, ஷர்மிளாதேவி, மாரியம்மாள், கீதா, அல்மிர்ஷாகனி, மகேஸ்வரி, பரமேஸ்வரி, கனகராணி, பிரியங்கா ஆகியோருக்கு உப தலைவர், சங்க செயலாளர், கோவில் தர்மகர்த்தா, பள்ளிச் செயலர் ஆகியோர் பரிசளித்து பாராட்டினர்.
பின்னர் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. ஆசிரியர் காளீஸ்வரி நன்றி கூறினார்.













