இன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வை 22,119 மாணவ, மாணவிகள் எழுதினர்

இன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வை 22,119 மாணவ, மாணவிகள் எழுதினர்

தமிழகமெங்கும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 11 ம் தேதி புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.11 ம் தேதி புதன்கிழமை முதல் தேர்வாக மொழிப்பாடமான தமிழ் பாடத் தேர்வு நடைபெற்றது.

இன்று 16 – 03 – 2026 திங்கட்கிழமை ஆங்கிலம் பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 22,119 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

 

இதில் தேர்வுக்காக பள்ளியில் பயிலும் மாணவர்கள் 22,223 பேரும், தனித் தேர்வர்கள் 369 பேர் என மொத்தம் 22,592 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் இன்றைய தேர்வினை 22,119 பேர் எழுதினர்.இதில் மாணவர்கள் 10,930 பேர், மாணவிகள் 11,189 உள்ளடங்குவர்.

இன்று 473 பேர் தேர்வு எழுத வரவில்லை.இதில் மாணவர்கள் 348, மாணவிகள் 125 பேர் ஆகும்.

தேர்வுக்காக விலக்கு பெற்றவர்கள் மாணவர்கள் 80, மாணவிகள் 44 என மொத்தம் 124 பேர் ஆகும்.இன்றைய ஆங்கிலம் தேர்வு எழுதியவர்கள் சதவீதம் அடிப்படையில் 97.357 ஆகும்.

இன்று தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் என மொத்தம் 145 பேர் எழுதினர்.இதில் மாணவர்கள் 78 பேர், மாணவிகள் 67 பேர் ஆகும்.