தூத்துக்குடி மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டியில் 46 பதக்கங்களை வென்ற திரு இருதய மெட்ரிக் பள்ளிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் !

தூத்துக்குடி மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டியில் 46 பதக்கங்களை வென்ற திரு இருதய மெட்ரிக் பள்ளிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் !

மாவட்ட அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 20.08.2026 அன்று நடைபெற்றது.

இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திரு இருதய மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 14 வயதிற்கு உட்பட்ட ,17 வயதிற்கு உட்பட்ட , மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் பிரிவில் 10 தங்கம் 14 வெள்ளி 22 வெண்கல பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் 31.08.2026 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை சகோதரி அந்தோணி பாப்பா,பள்ளி உதவி தலைமை ஆசிரியை சகோதரி ஜோசப்பின், உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், சாய் இன்டர்நேஷனல் அகாடமி நிறுவனர் மற்றும் பள்ளியின் பயிற்சியாளர் முத்து சங்கர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளைப் பாராட்டினர்.